Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும்…. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஊதியத்தை உயர்த்தி தருமாறு கூறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் ஏ.ஐ.டி.யு.சி மற்றும் தோல் பொருள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகளான லெனின் மற்றும் விமல் குமார் தலைமை தாங்கி உள்ளனர்.

அதன்பின் மாவட்ட பொதுச் செயலாளரான தேவதாஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றியுள்ளார். அப்போது தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் தோல் பதனிடும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்த தமிழக அரசு உடனடியாக தீர்வுக்கான வேண்டும் என கூறி கோஷமிட்டுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |