Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திரண்டு வந்த முகவர்கள்…. அலுவலக ஊழியர்கள் அவதி…. போலீஸின் செயல்….!!

அடையாள அட்டை வாங்குவதற்காக வந்த முகவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவுகளின் எண்ணிக்கை தற்போது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வேட்பாளர்களின் முகவர்கள் தங்களின் அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதன்பின் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்கணும் என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து வாக்குகள் எண்ணபடுவதில் பங்கேற்க இருக்கும் முகவர்களுக்கு அவர்களின் அடையாள அட்டையை அந்தந்த பகுதிகளின் அலுவலகத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதனால் வேட்பாளர்களின் முகவர்கள் தங்களின் அடையாள அட்டையை வாங்குவதற்கு அலுவலகத்திற்கு ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் திரண்டு வந்ததால் ஊழியர்கள் அனைவரும் பணிபுரிவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டம் கூட்டமாக நின்ற வேட்பாளர்களின் பிரமுகர்களை வரிசைப்படுத்தி அடையாள அட்டை வாங்குமாறு செய்துள்ளனர்.

Categories

Tech |