Categories
அரசியல்

மகன் அரசியல் பிரவேசம்…. இன்றைய நிலைமை இதுதான்…. விளக்கம் சொல்கிறார் வைகோ…!!!

மதிமுக நிர்வாகிகளில் சமீபகாலமாக வைகோவின் மகன் கட்சிகளில் முன் நிறுத்தப்படுகிறார். இதனை குறித்து வைகோ அண்மையில் தெரிவித்த கருத்து, “எனது மகன் துரை அரசியலுக்கு  வந்து கஷ்டப்பட வேண்டாம். மேலும் மதிமுகவின் பொதுச் செயலாளர் கூட்டம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது அதில் முடிவு என்ன என்பது தெரிய வரும்” என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.  இந்த நிலையில் விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பேச்சாளருமான எரிமலை வரதன் மறைவை ஒட்டி அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய அவர் “அரசியலுக்கு எனது மகன் துரை வருவதற்கு எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை. எனவே அதை தடுப்பதற்கு நான் என்னால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டேன் ஆனால் அதையும் மீறி பல விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. மேலும் என்னையும் தாண்டி தொண்டர்கள் மற்றும் எங்களுக்கு வழி காட்டுவதற்கு நல்ல வழிகாட்டி தேவைப்படுகிறது. துரை வைகோவை அதற்கு அனைத்து தகுதிகளும் இன்று உடையவர் என்று நினைத்து அழைத்துச் செல்கிறார்கள். இதுவே இன்றைக்கு உள்ள நிலைமை ஆகும்”என்று கூறினார்.

Categories

Tech |