உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விவசாயிகளின் மீது காரை ஏற்றியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார். இந்த வகையில் மத்திய மந்திரிகள் பதவியில் இருக்கும் அஜய் மிஸ்ராவை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் தலைவர்களுடன் பிரியங்கா லக்னோவில் உள்ள காந்தி சிலையின் முன் அமர்ந்து மௌன விரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.