ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முதல் பெரியபட்டினம் பகுதியில் உள்ள கடற்கரையில் திடீரென்று கடலானது பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள மீன்கள் எல்லாம் செத்து கரை ஒதுங்கியுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த மீனவர்கள் இதை பார்த்து அச்சமடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த மாவட்ட உதவி இயக்குனர் ராஜதுரை கடற்கரை பகுதிக்கு நேரில் சென்று இறந்துபோன மீன்களை எடுத்து ஆய்வு செய்தார். பின்னர் இறந்த மீன்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து வைத்துள்ளனர். மீன் இறப்பு குறித்து தெரிந்துகொள்வதற்காகவே மீன்களை சேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலமாக மீன்கள் இறப்பு குறித்த விவரம் விரைவில் வெளிவரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். கடல் பச்சை நிறமாக மாறி மீன்கள் சத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.