பிரித்தானியாவில் வளர்ப்பு மகனே கோடீஸ்வரர் ஒருவரின் கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி ஹோட்டல் தொழில் செய்து வந்த Sir Richard Sutton எனும் கோடீஸ்வரர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவல்துறையினருக்கு கோடீஸ்வரரான ரிச்சர்ட் அவருடைய 2 மில்லியன் பவுண்ட் மதிப்பு உள்ள குடியிருப்பில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு கத்தி குத்து காயங்களுடன் ஆபத்தான நிலையில் கிடந்த ரிச்சர்ட்-ஐ மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சொல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் சுமார் 9.15 மணி அளவில் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதற்கிடையே சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் Thomas Schreiber-ஐ கைது செய்துள்ளனர். இதையடுத்து இந்த கொலை வழக்கின் முதல்கட்ட விசாரணையில் Thomas Schreiber தனது தாயாரைக் கொல்ல முயற்சித்ததையும், தமது வளர்ப்பு தந்தையை கொலை செய்ததையும் மறுத்துள்ளார். அதனை தொடர்ந்து Thomas Schreiber நேற்று வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து நவம்பர் 29 முதல் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.