கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாதக கட்சியின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் அரசியல் கட்சியை தலைவர்களை அவதூறாக பேசியதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஜோதிமணி எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விரைவில் சீமான் ஒரு பாஜக அடிவருடி. பாஜக இந்த மாதிரியான பயங்கரமான குற்றச் செயல்களிலிருந்து தங்களை காப்பாற்றும் என்கிற தைரியத்தில் தான் இப்படி பேசி வருகிறார். இதற்கு தமிழ் மண்ணில் நாம் இடம் தரக்கூடாது. சீமானின் இந்த பேச்சானது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றம். இவர்களால் அப்பாவி இளைஞர்களின் எதிர்காலமும் நாசமாகிவிடும். தமிழ்நாட்டின் அமைதியான எதிர்காலத்தில் ஒரு துளி கூட சமரசம் செய்துகொள்ளக் கூடாது. தமிழக அரசு அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
சீமான் இந்த மேடையில் இருந்திருக்கிறார். அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இந்த பயங்கரவாத பேச்சு நடந்திருக்க முடியும். ஆகவே சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இதற்குமுன்பு இதே சட்டத்தின்கீழ் இப்படி கைது நடந்திருக்கிறது.@mkstalin https://t.co/yDQEz7cHgl
— Jothimani (@jothims) October 11, 2021