கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம். சின்னசாமியை அதிமுகவின் அமைப்பு செயலாளராக அதிமுக தலைமை நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எம்.சின்னசாமி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அவருக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர்.
தொழில்துறை அமைச்சர் முதல் மக்களவை உறுப்பினர் என பல பதவிகளை வகித்தவர். இந்நிலையில் இவருக்கு கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுகவில் அடுத்த அவைத் தலைவர் யார்? என்று பரபரப்பு நிலவி வந்த நிலையில் அமைப்பு செயலாளராக கரூர் எம். சின்னசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.