திண்டுக்கல் மாவட்டத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவைப் பொத்தனூர் சாலையில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று கடை திறந்து வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு 2 இளைஞர்கள் போதையில் வந்து ரூ.5 சிகரெட் கேட்டனர். அந்த இளைஞர்கள் கேட்ட சிகரெட் கடையில் இல்லை என்பதால் கடைக்காரர் சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து போதையில் இருந்த இளைஞர்கள் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பிறகு தங்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை வைத்து தாக்குதல் நடத்தியதால் செந்தில்குமார் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர வழக்கு பதிவு செய்து 2 இளைஞர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.