Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க…. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மருதை ஆற்றின் குறுக்கே மருதையாறு நீர்தேக்கம் அமைந்துள்ளது. அதன் நீர்மட்டம் 87.50 அளவை எட்டியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழு அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு அளவை நீர்மட்டம் எட்டியவுடன் நீர்தேக்கத்திற்கு வரும் முழு நீர்வரத்தும் மருதை ஆற்றில் வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவருக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |