தடுப்பணையில் ஆபத்தை உணராமல் வாலிபர்களும், சிறுவர்களும் குளித்து கொண்டிருக்கின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றுப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது. ஆனால் சித்திரை சாவடி தடுப்பணையில் ஆபத்தை உணராமல் ஏராளமான வாலிபர்களும், சிறுவர்களும் குளித்து கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது பரவலாக மழை பெய்து கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அதை உணராமல் தடுப்பணையில் சிறுவர்களும் வாலிபர்களும் குளித்து கொண்டிருக்கின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.