Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாங்கிய கடனுக்கு மேல் வட்டி…. உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு…. தூக்கில் தொங்கிய காவலாளி…!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி அருகில் பல்லாவரம் பாளையம் பகுதியில் கருப்பசாமி(61) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் – யில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு கூனம்பட்டி ஆலம்பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவரிடம் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். அதற்கு மாதம் மாதம் வட்டி செலுத்தி இதுவரை 24 ஆயிரம் வட்டி மட்டுமே கட்டியுள்ளார்.

இதையடுத்து கடன் கொடுத்த கணேசன் வட்டியுடன் சேர்த்து ரூ.1,00,000 பாக்கி உடனடியாக கொடுக்கும்படி கருப்பசாமியிடம் தவறான வார்த்தைகளால் பேசி தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் கருப்பசாமி கடிதம் எழுதிவைத்து சுடுகாடு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு கணேசன்தான் காரணம் என்றும் கடன் வாங்கிய தொகையை விட அதிகம் கேட்டு தொந்தரவு செய்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று எழுதி வைத்துள்ளார்.

அதன் பிறகு தகவலறிந்து வந்த கருப்பசாமியின் மகள் ஜெயக்குமார் தனது தந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதையடுத்து கருப்பசாமியின் மகன் ஜெயக்குமார் காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |