வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 7 7.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
வாக்கு எண்ணும் மையங்களில் 31 ஆயிரத்து 245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தாம்பரம் வாக்கு எண்ணும் மையத்தில் உணவு வழங்கப்படாததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணும் அலுவலர்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.