நாட்டில் 2020 -2021 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பயணியர் ரயில் சேவை வாயிலாக ரூ.10,513 கோடி ரூபாய் வருமானம் ஈட்டபட்டுள்ளது. இது முதல் காலாண்டை விட 113 சதவீதம் அதிகம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது 96 சதவீத ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயணியர் ரயில் சேவையால் ஈட்டப்படும் வருமானம் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கேட்ட கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் இந்த பதிலை அளித்துள்ளது.