வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் உள்ள மாலதி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மாலதி அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாலதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.