தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பின்னர் ஏற்படும் பாதிப்புகளை முன்னரே அறிந்து அதற்கு ஏற்றவாறு பல நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இன்றுமுதல் தொடங்கப்படுகிறது. இதற்காக சென்னையில் இரண்டு இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 50 மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் 17 அரங்குகள் அமைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சளி பரிசோதனை, மலம் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படும். முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்துக்கான அட்டைகளும் முகாம்களில் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.