சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர பூஜை சீசனுக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மகரவிளக்கு பூஜை விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இந்த பூஜைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு சாமி தரிசனம் தொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் செய்து குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 16ம் தேதி திறக்கப்படுகிறது. அதன்படி,17ஆம் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பின் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பரிசோதனை செய்து 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்களை கண்டிப்பாக வரவேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது இல்லாமல் வரும் பக்தர்களில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.