தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் திறக்க அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.
இதனை வலியுறுத்தி பாஜக சார்பில் 12 இடங்களில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் முடிந்து பாஜக தமிழக அரசுக்கு 10 நாள் கெடு விதித்து இருந்தனர். இதன் தொடர்ச்சியாக திமுக – பாஜக இடையே வார்த்தை மோதல் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேச இருக்கின்றார். இந்த திடீர் சந்திப்பு திட்டமிடல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.