விவசாய கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில் சந்தனகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனால் அவரின் முதுகு தசை கிழிந்து விட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சந்தன குமாருக்கு முதுகில் வலி இருந்துள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தன குமார் வயலில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.