திருச்சி மாவட்டத்தில் துறையூர் அருகில் உள்ள கொல்லி மலை அடிவாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு 2மணிக்கு மணிக்கு பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஆலத்துடையன்பட்டி மற்றும் சிறுநாவலூர் ஆகிய ஏரிகள் நிரம்பியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் உப்பிலியபுரம் மற்றும் பெருமாள் மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இதனால் மின் மற்றும் போக்குவரத்து ஆகிய தடைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையில் இந்த ஆண்டு பெய்த மழையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கனமழை மழை பெய்துள்ளது.