Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்சியருக்கு கிடைத்த தகவல்… 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு… உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு…!!

தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் நடத்திய சோதனையில் 7 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ஆட்சியர் ஸ்ரேயாசிங் உத்தரவின் படி தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கோமதி, மாலா, மோகன், விஜய், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் ஆண்டனி ஆகியோர் மாவட்டம் முழுவதிலும் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது கூலிப்பட்டி கொசவம்பட்டி ஆகிய இடங்களில் 18 வயது நிரம்பாத 2 சிறுமிகள் மற்றும் 3 வடமாநில குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளனர். இதனையடுத்து நாமக்கல்லை சேர்ந்த 3 சிறுவர்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் நிறுவன உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் முறை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும், சில நேரங்களில் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே 18 வயது நிரம்பாத சிறுவர் மற்றும் சிறுமிகளை பணியில் அமர்த்துவது மிகபெரிய குற்றம் எனவும், இதை தவிர்க்க வேண்டும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Categories

Tech |