Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை கோவில்கள் திறப்பு?…. ஐகோர்ட்டில் இன்று விசாரணை….!!!

தமிழகத்தில் விஜயதசமியை முன்னிட்டு வருகின்ற கோவில்களை  வெள்ளிக்கிழமை கோவில்களை திறக்கவேண்டும் என்று ஆர். பொன்னுசாமிஎன்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 வது அலை படிப்படியாக குறைந்துள்ளது. அதனால் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டுத் தலங்கள் மூடி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி பண்டிகையை வரவிருக்கிறது. நவராத்திரி பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை அன்று தமிழக அரசு உத்தரவின்படி கோவில் திறக்காது. ஆனால் சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை திறக்க அரசு அனுமதித்துள்ளது. எனவே விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்துள்ளது.

Categories

Tech |