Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை…. சுவர்கள் இடிந்து விழுந்து கார்கள் சேதம்….!!!!

பெங்களூருவில் தொடர் கனமழை காரணமாக இரண்டு இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்து 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.

கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பருவமழையின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் பழமையான வீடுகள் மற்றும் சுவர்களும் இடிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகர், மெஜஸ்டிக், ஆனந்த ராவ் சர்க்கிள், கப்பன் பார்க் ,இந்திரா நகர் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் கனமழை கொட்டி தீர்த்தது.

இதில் இந்திரா நகர் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி மைய வளாகம் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுவரின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமாயின. இதேபோல் தன்வந்திரி ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சுவர் ஒன்றும் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சுவரை ஒட்டி வீடு ஒன்றும் இருந்தது. தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்ததால் வீட்டிற்கும் சேதம் ஏற்படும் நிலை உண்டானது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று இயந்திரத்தின் உதவியுடன் சுவரை அகற்றினர். மேலும் அந்த வீட்டில் வசித்து வந்த விஜயம்மா மற்றும் அவரது குடும்பத்தினரையும் வீட்டை விட்டு வெளியேற்றினர். மேலும் அந்த சுவரின் அருகில் ரயில்வே மேம்பாலம் ஒன்று செல்கிறது. இந்த சுவர் இடிந்து அந்த மேம்பாலத்தின் மீது விழுந்து இருந்தால் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |