தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது .அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக அணைகள் மற்றும் நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அணையில் நீர் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதன்படி பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1338 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்தாவது முறையாக தற்போது திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வேறு இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.