அசாத்திய நினைவாற்றல் கொண்ட சிக்கமகளூரு வைத்து சேர்ந்த 3 வயது சிறுமி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
சிக்கமகளூரு மாவட்டம் பனகல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாஸ்வத் மற்றும் சுமிதா தம்பதி இவர்களுக்கு ஆர்வி என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. சிறுவயது முதலே இந்த சிறுமிக்கு அசாத்திய நினைவாற்றல் இருப்பதை அறிந்த பெற்றோர் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் அவளது சிறுமியின் நினைவாற்றலை பதிவு செய்ய விரும்பியுள்ளனர். இதனால் அந்த நிறுவனத்திற்கு இணையதளம் மூலம் ஆர்வியின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர்.
தொடர்ந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சிறுமியின் நினைவாற்றலை கண்டறிய ஆன்லைன் மூலம் சோதனை நடத்தியது.அதில் சிறுமி ஆர்வி கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நகரங்கள், நாட்கள், நிறங்கள்,பறவைகள்,விலங்குகள்,காய்கறிகள், ஆகியவற்றை தெளிவாக சொல்லி அசத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி பல்வேறு குரல்களில் விலங்குகளைப் போல் மிமிக்ரி செய்தும் தன் திறமையை காட்டியிருக்கிறார் 3 வயதான சிறுமி ஆர்வி. இதனை தொடர்ந்து சிறுமியின் அசாத்திய நினைவாற்றலை கின்னஸ் இந்திய புகார் ரெக்கார்ட் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து சிறுமியின் பெயர் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.