இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்த இளைஞர்கள் பலரும் எப்படியாவது அரசு வேலைக்குச் சென்று விட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர், அதற்காக பயிற்சி மையங்களில் சேர்ந்து போட்டித் தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி வருகின்றனர். பலரும் டிஎன்பிஎஸ்சி, TRB, TET போன்ற தேர்வுகளுக்கு மட்டும் தயார்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசு தேர்வுகளில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் இளைஞர்களின் கவனத்தை மத்திய அரசு பணிகளின் பக்கம் கொண்டு செல்லும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான SSC மூலம் தற்போது 10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான SSC-Phase-IX-Project Assistant பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் 3261 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த மாதம் 25ம் தேதி வரை இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ. 100 ஆகும்.
SC/ST பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள https://ssc.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று அறியலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் கூகுள் மீட் செயலி வாயிலாக சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில், பாடக்குறிப்புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் ஆகியவை இணையதளம் வாயிலாகவே பகிரப்படும். வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சிபெற அனைத்து வழிவகைகளும் செய்யப்படுகிறது. பயிற்சி வகுப்புகளைப் பற்றி அறிய 9499055938 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்தேர்விற்கான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும். ஆகவே போட்டித்தேர்வு எழுதி மத்திய அரசில் வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோ