Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் கிரிக்கெட்டிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஆம்லா…..!!

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரரான ஹாசிம் ஆம்லா கேப் டவுன் பிளிட்ஸ் அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரைப்போலவே, தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஸான்சி சூப்பர் லிக் எனப்படும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் கேப் டவுன் பிளிட்ஸ் அணி கடந்த சீசனில் இரண்டாமிடம் பிடித்திருந்தது.தற்போது கேப் டவுன் பிளிட்ஸ் அணி இந்த சீசனுக்கான அணியின் ஆலோசகராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான ஹாசிம் ஆம்லாவை நியமித்துள்ளது.மேலும் ஆம்லா இந்தாண்டு துபாயில் நடைபெறவுள்ள டி10 கிரிக்கெட் தொடரின் கர்நாடகா டஸ்கர்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால், இம்மாதம் 25ஆம் தேதிக்குப் பின்னரே அவர் கேப் டவுன் பிளிட்ஸ் அணிக்குத் திரும்ப முடியும்.

இதுகுறித்து கேப் டவுன் அணியின் தலைமை பயிற்சியாளர் கூறுகையில், ’ஆம்லா இந்த விளையாட்டில் நெடுங்காலம் பயணித்தவர். அதனால் இதில் உள்ள அனைத்து விதமான அறிவும் அவரிடம் உள்ளது. இது எங்கள் அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் விஷயமாக நாங்கள் கருதுகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரராக வலம் வந்த ஹாசிம் ஆம்லா, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |