ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், அதேபோல் மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.. இதனை தொடர்ந்து இன்று பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன..
இந்நிலையில் திரிசூலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், வார்டு உறுப்பினர் பதவிக்கும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட்ட சரஸ்வதி, சத்யநாராயணன், முத்துக்கனி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்கிறது.. எனவே வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு எடுக்க வேண்டும் என்று அவசர வழக்கு தொடர்ந்தார்கள்..
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே வாக்குப்பதிவு காலையில் தொடங்கி திட்டமிட்டே நடைபெறுகிறது. எந்த வித குற்றச்சாட்டும் இல்லை.. முறைகேடு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு தரப்பிலும், அதேபோல நீதிபதி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது..
மேலும் மாநில தேர்தல் ஆணையம் சட்டப்படி முறைகேடு நடைபெற்றதால் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும், வாக்கு எண்ணிக்கைகளை வீடியோ பதிவு செய்வது தொடர்பாகவும், இந்த மனு மீது 2 வாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்..