கடந்த 3ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பாஜகவினரின் கார் விவசாயிகள் மீது மோதியது இதில் சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது காரை மோதியது மத்திய மந்திரி மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஆபீஸ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தால் மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனிடையே மத்திய மந்திரி பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மௌனவிரதம் போராட்டம் நடத்தினார். இந்த சூழ்நிலையில் பணியான நான்கு விவசாயிகளுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த பிரியங்கா காந்தி லகிம்பூர் கெரி மாவட்டத்திற்கு என்று செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து அங்கு அசம்பாவிதத்தை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.