Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி முக்கிய சீரியல்களின் நேரம் திடீர் மாற்றம்… வெளியான புதிய தகவல்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது .

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹிட்டான சில சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பு செய்தாலும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்கின்றனர். தற்போது வானத்தைப் போல, ரோஜா, அன்பே வா, சித்தி-2, கண்ணான கண்ணே போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்நிலையில் சன் டிவியில் அருவி என்கிற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் சில முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அருவி சீரியல் 2:30 மணிக்கும், தாலாட்டு சீரியல் 3 மணிக்கும், வானத்தைப் போல சீரியல் 7:30- 8:30 வரை (ஸ்பெஷல் ஷோ), பூவே உனக்காக சீரியல் இரவு 10 மணிக்கும், சித்தி-2 சீரியல் இரவு 10:30 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Categories

Tech |