பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைபிடிக்குமாறு தலீபான்களுக்கு ஐ.நா பொது செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவையின் 9 ஆவது பொதுச் செயலாளராக ஆண்டனியோ குட்டரெஸ் பதவி வகித்து வருகிறார். தற்போது ஆண்டனியோ குட்டரெஸ் அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைபிடிக்குமாறு தலீபான்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தலீபான்கள் ஆப்கான் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆண்டனியோ குட்டரெஸ் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து ஆண்டனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை பொறுப்பேற்ற பின், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், முன்னாள் அரசு அலுவலகர்கள் உள்ளிட்ட குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். அந்த வகையில் தலீபான்கள் அளித்த வாக்குறுதிகளை தவறாமல் கடைபிடிக்குமாறு தலீபான்களிடம் கடுமையாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் தலீபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அதோடு, சர்வதேச அளவிலான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றின் கீழ் தங்களது கடமைகளை தவறாது நிறைவேற்ற வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.