Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சு அசல் அப்படியே இருக்கே… ‘தெறி’ பட சண்டைக்காட்சியை ரீ கிரியேட் செய்த இளைஞர்கள்… வைரல் வீடியோ…!!!

தெறி படத்தின் சண்டைக் காட்சியை இளைஞர்கள் ரீ கிரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சமந்தா, நைனிகா, எமி ஜாக்சன், மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

https://www.youtube.com/watch?v=39wfRJpoDTY

அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய் போலீஸாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் விஜய் தெருவில் இறங்கி ரவுடிகளுடன் சண்டை போடும் காட்சி செம மாஸாக அமைந்திருக்கும். இந்நிலையில் அந்த சண்டைக்காட்சியை இளைஞர்கள் சிலர் இணைந்து ரீ கிரியேட் செய்துள்ளனர். அச்சு அசல் தெறி படத்தில் வருவது போலவே இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |