Categories
சினிமா

தெலுங்கு சங்கத்தில் இருந்து விலகல்…. நடிகர் பிரகாஷ்ராஜ் திடீர் அறிவிப்பு…!!!!

தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். அதில் பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்த நிலையில், தெலுங்கு நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இருபத்தி ஒரு வருடங்களாக இந்த சங்கத்தில் நான் இருக்கிறேன்.

ஆனால் என்னை வெளியிலிருந்து வந்த ஆள், விருந்தினர் என்று அடையாளப்படுத்தியே தேர்தலில் தோற்கடித்து இருக்கிறார்கள். எதிர்த்தரப்பில் ஜெயிப்பதற்கு அவர்கள் அதைச் சொன்னாலும் அவர்களுக்கு வாக்களித்து அவர்களும் அதையே ஆதரிப்பதாக தெரிகிறது. அதனால் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனால் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |