Categories
மாநில செய்திகள்

BREAKING: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகத்தில் பெரம்பலூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். தமிழகத்தில் வரும் 16ம் தேதி வரை கனமழை நீடிக்கும். அந்தமான் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. அதனால் பலத்த காற்று வீசும் என்பதால் வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |