ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முசிறி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசக்தி தனது நண்பரான கமலேஷ் என்ற சிறுவனுடன் முசிறி ஏரி அருகில் இருக்கும் நாவல் மரத்தின் பழம் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவர்கள் இருவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவர்களை மீட்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவர்களின் சடலங்களை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.