Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“உன்னை திருமணம் செய்வேன்” பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய மின்வாரிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூதநத்தம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துவேல் என்ற மகன் இருக்கின்றார். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதில் முத்துவேல் 24 வயதுடைய ஒரு பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் முத்துவேல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெண்ணுடன் முத்துவேல் உல்லாசமாக இருந்துள்ளார். இதனிடையில் முத்துவேலுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்க்கத் தொடங்கினர்.

இதை அறிந்த அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முத்துவேலிடம் கேட்டுள்ளார். அதற்கு முத்துவேல் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அந்தப் பெண் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றிய முத்துவேல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Categories

Tech |