Categories
அரசியல்

#ElectionBreaking: 1ஓட்டு மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர் ….!!

கோவையில் பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைந்திருக்கின்றார்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

வாக்கு எண்ணும் மையங்களில் 31 ஆயிரத்து 245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.  140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 27 ஆயிரத்து 003 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 28 மாவட்டங்களில் விடுபட்ட 789 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி திமுக 47 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும், அதிமுக 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில் கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவை சேர்ந்த கார்த்தி ஒரே ஒரு வாக்கு மட்டுமே வெற்றி தோல்வி அடைந்துள்ளார். குடும்பத்தில் மொத்தம் 5 வாக்குகள் இருக்கும் நிலையில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததால், கார்த்தி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதன் மூலமாக அவரது குடும்பத்தாரே அவருக்கு வாக்கு  செலுத்தவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

Categories

Tech |