Categories
சினிமா தமிழ் சினிமா

பெயர் மாற்றம் செய்து கொண்ட எடிட்டர் வி.டான் போஸ்கோ… வெளியான தகவல்…!!!

பிரபல எடிட்டர் வி.டான் போஸ்கோ தனது பெயரை மாற்றியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் டான் போஸ்கோ சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் எடிட்டிங் சினிமா துறையினரை அதிகம் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து டான் போஸ்கோ பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தார். தற்போது எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொம்புவச்ச சிங்கம்டா படத்தில் டான் போஸ்கோ எடிட்டராக  பணிபுரிந்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

 

பெயரை மாற்றிய எடிட்டர் வி.டான் போஸ்கோ

இந்நிலையில் டான் போஸ்கோ தனது பெயரை மாற்றியிருக்கிறார். கொம்பு வச்ச சிங்கம்டா படத்திலிருந்து தனது பெயருடன் பிஜு என்ற புனைபெயரை இணைத்து பிஜு.வி.டான் போஸ்கோ என மாற்றியுள்ளார். தற்போது பொன்குமார் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ஜீவா, தன்யா, பாயல் ராஜ்புட் ஆகியோர் நடிப்பில் உருவாக இருக்கும் கோல்மால் படத்திற்கு பிஜு.வி.டான் போஸ்கோ எடிட்டராக பணியாற்ற இருக்கிறார். மேலும் இவர் வெப் தொடர் ஒன்றிலும் பணியாற்றி வருகிறார்.

Categories

Tech |