மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பொன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இதனால் படுகாயமடைந்த பொன்ராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பொன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.