Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. இதுவரை டெங்குவால் 342 பேர் பாதிப்பு…. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை….!!!!

சென்னை தியாகராயநகரில் அரங்கில் வைத்து கட்டுமான ஊழியர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிகர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், கருணாநிதி, பிரபாகர் ராஜா மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம் என்ற புத்தகத்தை வெளியிட்டு www.tndph.com என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். அதன்பிறகு பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்து வரான் வரான் பூச்சாண்டி என்ற விழிப்புணர்வு பாடல் ஒளிபரப்பப்பட்டு அதற்கு டெங்கு கொசு போல் தோற்றமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு மற்றும் கேரள எல்லைகளிலும் டெங்கு ஒழிப்பு பணி ஆய்வு செய்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை டெங்குவால் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு 29,000 மட்டுமே பரிசோதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை 89,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 26 ஆயிரத்து 978 கொசு மருந்துகள் அடிக்கும் பணி யாளர்கள் மற்றும் 14833 கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களும் அதற்கு தேவையான மருந்துகளும் தேவையான அளவு உள்ளது. தமிழகத்தில் வரும் வாரங்களில் பண்டிகை காலம் தொடங்குவதால் தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |