இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகையே உலுக்கிய கொரோனா வைரசானது இந்தியாவில் கோவிசில்டு மற்றும் கோவாசின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மூலம் கட்டுக்குள் வந்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், இந்த தடுப்பூசி பயன்பாடு 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்த முடியும் என மத்திய அரசு அறிவித்திருந்தது சற்றே கவலையளிக்கும் விஷயமாகவே இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளையே அதிக அளவில் தாக்கும் என சில எச்சரிக்கைகளும் விடப்பட்டன. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசியை செலுத்த முடிவு செய்து பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக தற்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய மருந்துகள் கட்டுப்பாடு இயக்குனரகமானது மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் படி இரண்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.