திருவள்ளுவரை அவமதித்தவன் மண்ணிற்கு பாரம் என திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பன்முகத்தன்மையை வைத்துக்கொண்டுதான் உலக அளவில் இந்தியா அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், உலகிற்கு பொதுவான திருவள்ளுவருக்கு மத சாயம் பூசுவது தவறு என்றும் கருணாஸ் தெரிவித்தார். மேலும் திருவள்ளுவர் மீது மாட்டு சாணி அடிப்பதற்கு என்ன இருக்கு? எப்பேர்ப்பட்ட மகான் அவர்,
இப்படி கீழ்த்தனமானவன் இந்த மண்ணுக்கு பாரமா? இவன் இருந்தா என்ன ? செத்தா என்ன ? இவனை பிடிக்கனும் , விசாரணை செய்யணும். இவன் மேல வழக்கு போடணும். இதெல்லாம் ஒரு வேலையா ? இதெல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு , கீழ் தனமா இருக்கு .தனி ஒழுக்கமில்லாத காட்டுமிராண்டிகளாக தமிழர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று இது காட்டுகின்றது என்று கருணாஸ் ஆவேஷமடைந்தார்.