முகக்கவசம் அணியாத 5 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மாட்டு சந்தை திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் மாட்டு சந்தை திறக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்திருந்த 5 பேர் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அவர்கள் 5 பேருக்கும் தலா ரூபாய் ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.