சென்னை வில்லிவாக்கம் பெட்ரோல் பங்கில் டிஎஸ்பி பைக்குக்கு பெட்ரோல் போடும்போது மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு டிஎஸ்பி பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் போடுவதில் மோசடி என புகார் எழுந்துள்ளது. 2.47லிட்டர் பெட்ரோல் போட்டதாக மீட்டரில் காட்டிய நிலையில் அளந்து பார்த்தபோது 1.8 சோ மச் லிட்டர் மட்டுமே பெட்ரோல் இருந்துள்ளது.
இதனை தட்டிக்கேட்ட டிஎஸ்பி.லவகுமாரிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து உடனே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஒரு போலீஸ் அதிகாரியிடமே இப்படி மோசடி செய்யும் போது சாதாரண மக்களின் நிலை என்ன ஆவது என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.