Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…. பத்தாயிரம் பொம்மைகள் பயன்படுத்தி கொலு…. அசத்திய பெண்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் 10,000 பொம்மைகள் பயன்படுத்தி கொலு வைத்திருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் பெண்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடுவது வழக்கமாகும். கொலு வைக்கும் கலாச்சாரம் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். வட இந்தியாவில் நவராத்திரியின்போது இதுபோன்ற கலாச்சாரம் பின்பற்றப்படுவது இல்லை. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண் தனது வீட்டில் பத்தாயிரம் பொம்மைகள் பயன்படுத்தி கொலு வைத்துள்ளார்.

பாக்கியலட்சுமி வீட்டில் சுமார் 60 ஆண்டுகளாக இந்த கொலு வைக்கும் கலாச்சாரம் இருந்து வருகிறது. இதனால் தொடர்ந்து அவர் வீட்டில் அதிக அளவில் பொம்மைகளை வாங்கி வைத்துள்ளனர். மொத்தம் அவர் வீட்டில் 50 ஆயிரம் பொம்மைகள் உள்ளதாகவும் அதில் தற்போது பத்தாயிரம் பொம்மைகளை காட்சிக்கு வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் வைரலாகி வருகிறது.

Categories

Tech |