சிம்புவின் ‘பத்துதல’ படத்தில் நடிகர் ரெடிங் கிங்ஸ்லி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரெடிங் கிங்ஸ்லி கோலமாவு கோகிலா படத்தில் டோனி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர், இவர் ஏ1 படத்திலும் நடித்திருந்தார்.
இதனையடுத்து, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திலும் ரெடிங் கிங்ஸ்லி நடித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் டாக்டர் படத்தில் சிறந்த நகைச்சுவையை செய்துள்ளார் ரெடிங் கிங்ஸ்லி. மேலும், தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக பிரபல நடிகரின் படத்திலும் ரெடின் கிங்ஸ்லி ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி, சிம்புவின் ”பத்துதல” படத்தில் இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.