சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சம்பூத்து பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார்ம். இந்த தம்பதியினருக்கு சலோமி நித்தி என்ற மகள் இருந்துள்ளார். மேலும் செல்வி இறந்துவிட்டதால் செல்லத்துரை சின்னதாய் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் சலோமி நித்தி வீட்டில் வேலை பார்க்காமல் டிவி பார்த்துக்கொண்டே இருந்தார். இதனை சின்னதாய் மற்றும் அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சலோமி நித்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் இது குறித்து மானூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சலோமி நித்தியின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.