தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்குளம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த மாதம் 15-ஆம் தேதி செங்குளம் காலனிக்கு அருகில் உள்ள குளத்துகரையில் மாரியப்பன் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் மேலசெவல் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் மகன் சிவா, முருகன் என்பவரின் மகன் சிவா மற்றும் பேச்சிமுத்து உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நயினார்குளம் பகுதியில் வசிக்கும் மாடசாமி என்பவரின் மகனான முருகன் என்பவரை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காவல்துறையினர் முருகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.