Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹிட் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்…. வேண்டாம் என மறுத்த சிவகார்த்திகேயன்…. காரணம் இதுதான்….!!

பிரபல மலையாள ‘பிரேமம்’ படத்தை தமிழ் ரீமேக் செய்ய மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன். 

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

இந்த வருடம் நிறைய படங்களில் நடிக்கிறேன் - சிவகார்த்திகேயன் ||  Sivakarthikeyan says i play a lot of films this year

மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், மலையாள படமான ”பிரேமம்” படத்தின் தமிழ் ரீமேக் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததாகவும், ஆனால் அதை அவர் வேண்டவே வேண்டாம் என மறுத்துள்ளாராம். ஏனென்றால், அந்த படம் வெறும் கதையல்ல அது மேஜிக். மேலும், பிரேமம்  போன்ற படங்களை எல்லாம் ரீமேக் செய்ய முடியாது எனக் சிவகார்த்திகேயன் கூறியதாக  தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |