ரைஸ் மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2100 கிலோ ரேஷன் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சங்கர் மற்றும் அதிகாரிகள் பழைய பேட்டை பகுதியில் உள்ள சுப்பையா என்பவருக்கு சொந்தமான மாவு மில்லில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 51 மூட்டைகளில் 2100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 100 கிலோ கோதுமை ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போன்று தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளம் மல்லிகை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.